Tuesday 21 March 2017

வாழ்கையின் 20 கோட்பாடுகள்

வாழ்கையின் 20 கோட்பாடுகள்
எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்னையாக இருந்தாலும் அதை அழகாகையாளுங்கள்.
அர்த்தமில்லாமலும்தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.
தானே பெரியவன்தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
விட்டுக் கொடுங்கள்.
சில நேரங்களில்சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.
நீங்கள் சொன்னதே சரிசெய்வதே சரி என்று கடைசி வரை வாதாடாதிர்கள்.
குறுகிய மனப்பான்மையை விட்டடொளியுங்கள்.
உண்மை எதுபொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும்,  அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள்.
மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கவலைப்படாதிர்கள்.
அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதிர்கள்.
எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும்அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ,   சொல்லி கொண்டிருக்காதிர்கள்.
கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதிர்கள்.
உங்கள் கருத்துகளில் உடும்புபிடியை இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.
மற்றவர்களுக்கு உரிய மரியாதையை காட்டவும்,  இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் மறக்காதீர்கள்.
புன்முறுவல் காட்டவும்,சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல் நடந்து கொள்ளாதிர்கள்.
பேச்சிலும்நடத்தையிலும்திமிர்த்தனத்தயும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.
அவ்வப்போது நண்பர்கள் உறவினார்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.
தேவையான இடங்களில் நன்றியும்பாராட்டையும் சொல்ல மறவாதிர்கள்.
நன்றி
 
S. NATARAJAN, PRESIDENT,
LIAFI-COIMBATORE DIVISION